வாஷிங்டன்: 

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை பாராட்டும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்தக் கோள்களில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என விண்வெளி ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வானியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை.

இதனால் பூமி அளவு கொண்ட ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கோள்களும் ஒரே சுற்றுப்பாதையில் பயணிக்கிறது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.

புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.  இந்நிலையில் இந்த கோள்களில் உயிர் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்திய  பின்புதான் உறுதியாக சொல்லமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதற்கு ஆங்கில எழுத்துக்களான b,c,d,e,f,g,h எனப் பெயரிட்டுள்ளனர்.

கெமிக்கல் பரிசோதனைகள் மூலம் 99% உயிர்கள் உள்ளதை உறுதி செய்ய முடியும். ஆனால், நாம் நேரில் செல்லாமல் அதனை முழுவதும் உறுதிப்படுத்திட முடியாதென கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அமரி டிரியாட் ( Amaury Triaud) கூறினார்.