மகாராஷ்டிரா: 
ர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும்  என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கேப்டவுன் நகரிலிருந்து டெல்லி வழியாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திற்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒமிக்ரான் வகை கொரோனாவா என்பது பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என மகாராஷ்டிர சுகாதாரத்துறையினர் கூறினர்.
இந்நிலையில், சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப் படும்  என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,   அதிக ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு RT PCR 2,4 & 7-வது நாளில் மேற்கொள்ளப்படும். சோதனை நேர்மறையாக இருந்தால், மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும்,  எதிர்மறையாக இருந்தால், 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.