டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கிருந்து தாயகம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்றும் மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இன்று பிரிட்டனில் இருந்து டெல்லி வந்தவிமானத்தில் 24 பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா நெகடிவ் என முடிவு வந்தாலும், அனைவரும் 7 நாள் அரசின் தனிமைப்படுத்துதல் முகாமிலும், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலிலும் இருக்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்று காரணமாக அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பிரிட்டனுக்கு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த இந்திய அரசு நேற்றுமுதல் மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் இருந்து இன்று டெல்லி வருகை வந்த ஏர்இந்தியா விமானத்தில் 246 246 பயணிகள் தாயகம் வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் அரசின் தரிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து கூறிய மத்தியஅரசு, பிரிட்டனில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் என சோதனை முடிவு வந்தாலும், அவர்கள் 7 நாட்கள் அரசு முகாமிலும், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.