சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை   1,02,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக  சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 40,111 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 23,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , சென்னையில் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,586 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்ணாநகரில் 2,431 பேரும், ராயபுரத்தில் 2,297 பேரும், தேனாம்பேட்டையில் 2,130 பேரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த மே மாதம் இறப்பு எண்ணிக்கை 100 -ஐ எட்டியது. இதைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து ஜூன் 7-ல் 212 -ஆகவும், ஜூன் 18-ல் 501- ஆகவும், ஜூலை 1-ல் 929-ஆக அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 67 போ் உயிரிழந்தை அடுத்து இறப்பு எண்ணிக்கை 996-ஆக உயா்ந்துள்ளது.
 
 

[youtube-feed feed=1]