ஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை  ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் செவ்வாயன்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது. இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன.  பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவின் வடக்கே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது, அங்கு அதிகாலையில் (0320 GMT) ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,  நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக குறிப்பிடத்தக்க சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை, ஆனால் “நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.”  அதிகாரிகள் எச்சரிக்கையுடன்  இருக்கும்படி பொதுமக்களை வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக கூறிய இந்தோனேசிய அதிகாரிகள், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலை தாக்கும் வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பீதியடைய வேண்டாம், ஆனால் கரையிலிருந்து பாதுகாப்பான இடத்தைத் தேடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தென்கிழக்கு சுலவேசியில் உள்ள புட்டனில் வசிக்கும் அல்வான் கூறுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் எனது தொலைபேசியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். 30 வினாடிகள் அதை உணர்ந்தேன். அது வலுவாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் கூறியது, மௌமரே நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தை கண்டறிந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் இந்திய சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.