சென்னை: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு உள்பட கொரோனா நிலவரம், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது, உயர்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்தடுத்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனாபாதிப்பு ஏற்படுவது, 6வது வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை பள்ளிகளை திறக்கலாமா என்பது உள்பட பல்வேறு நிகழ்வுகள் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30மணி அளவில் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
மேலும், தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள கோவை உள்பட சலி மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்து தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று, அதன்பிறகே, ஊரடங்கு நீட்டிப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.