டில்லி:
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 69 சதவிகிதம் பேர் பலியாகி வருவதாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிறந்து 28 நாட்களுக்குள் மரணமடையும் குழந்தைகள் விகிதத்தில், ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 46.5 குழந்தைகள் சராசரியாக மரணிக்கின்றன என்றும், இதில் இந்தியா 12வது இடத்தில் உள்ளதாகவும், இங்கு ஆயிரம் குழந்தைகளிலும் 25.4 குழந்தைகள் மரணிக்கின்றன என்றும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள . ஐ.நா.வின் யுனிசெப் அறிக்கையில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்டசத்து பற்றாக்குறைக்கு இலக்காகிறார்கள். 42 சதவீத குழந்தைகளே (6 முதல் 23 மாதங்கள் வரையிலான வயது) போதிய அளவில் உணவை பெறுகிறார்கள். 21 சதவீத அளவிலான குழந்தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறுகின்றனர் என்று தெரிவித்து உள்ளது.
இந்திய பெண்களின் சுகாதாரத்தில், ஒவ்வொரு 2வது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பரவலாக ரத்த சோகை காணப்படுகிறது.
5 வயதுக்கு கீழுள்ள ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது.
ஒவ்வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும்,
ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.
மேலும் ஊட்டச்சத்து குறைவால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 69 சதவிகிதம் பேர் இந்தியாவில் பலியாகி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வரும் நிலையில், ஊட்டச்சத்து குறைவு காரணமாக குழந்தைகள் இறப்பு அதிகரித்து உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.