டெல்லி:  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உள்பட  நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகள் நியமனம் செய்ய, நீதிபதிகளின் பட்டியலை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் கொலிஜியிம் கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட  12 உயர்நீதி மன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்க 112 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் இறுதியாக 68 பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 12 பேர் நீதித்துறையில் இருந்தும், 44 வழக்கறிஞர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிந்துரையை கொலிஜியம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது. இதை சட்டஅமைச்சகம் ஆய்வு செய்து அறிவிக்கும். அதன்பிறகு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.