டில்லி:

ன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் 11 பேருக்கு மட்டுமே விருது வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி வழங்குவார் என அறிவிக்கப்பட்டதால் சலசலப்பை ஏற்பட்டது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகளை வாங்கமிழ் பட இயக்குநர் செழியன், பாகுபலி தயாரிப்பாளர் உள்ப  69 பேர் மறுப்பு தெரிவித்து  உள்ளனர். இதன் காரணமாக விழா அரங்கில் பரபரப்பு நிலவுகிறது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள், 111 பேருக்கு  கடந்த மாதம் 13 ம் தேதி மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்ப்படமான  ‘காற்று வெளியிடை’ படத்தின் சிறந்த பாடல்களுக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ‘காற்று வெளியிடை’ படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது சாஷா திருப்பதிக்கும், சிற்ந்த தமிழ்ப் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூ லெட்’டுக்கும் அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகள் வழங்கும் விழா, இன்று டில்லியில் நடைபெறுகிறது. இதில், 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்குவார் என்றும், மீதமுள்ள 120 பேருக்கும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி வழங்குவார் என்றும் தகவல் வெளியானது. இது விருது பெற வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு  பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ், ஒளிப்பதிவாளர் செழியன் உள்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் விருது வழங்காவிட்டால், விருது வழங்கும் விழாவைப் புறக்கணிக்கப் போவதாக 69 பேர் கடிதம் மூலம் குடியரசு தலைவருக்கு தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

விருது வழங்கும் விழா இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அரங்கத்தில் சலசலப்பு நிலவி வருகிறது.