டில்லி
இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது அத் பல உலக நாடுகளில் பரவி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவிய ஒமிக்ரான் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இதுவரை இந்தியாவில் 21 மாநிலங்களில் ஒமிக்ரான் பரவி உள்ளதாகவும் மொத்தம் 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டில்லியில் 167 பேர், மகாராஷ்டிராவில் 165 பேர் மற்றும் கேரளாவில் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிரத் தெலுங்கானாவில் 49 பேர் மற்றும் ராஜஸ்தானில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் ஆறாம் இடத்தில் 34 பேர் பாதிப்புடன் உள்ளது. மேலும் கர்நாடகா 31; மத்தியப் பிரதேசம் 9, மேற்கு வங்கம்- 6; ஹரியானா-4; ஒடிசா-8; ஆந்திரா-6; ஜம்மு காஷ்மீர்-3; உத்தரப்பிரதேசம்-2; சண்டிகர்-3; லடாக்-1 உத்தரகாண்ட்-4. இமாச்சல பிரதேசம்-1. மணிப்பூர்-1,கோவா -1 என பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 186பேர் குணமடைந்துள்ளனர்.