பெங்களூரு
இன்று நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மாலை 5 மணிக்கு 65.69% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று ஒரே கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
மொத்தம் 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயச் சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த முறை கர்நாடகாவில் இந்த முறை, ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கக் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்களிக்கக் கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கடைசியாக வெளியான அறிவிப்பின்படி மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவாகியுள்ளது.