டில்லி:

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற 3வது கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 65.61 சதவீத வாக்குகள்  பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதிக பட்சமாக அசாமில், 80.73 சதவிகித வாக்குகளும், குறைந்த பட்சமாக ஜம்மு காஷ்மீரில் 13.61 சதவிகிதம் மட்டுமே வாக்குகளும் பதிவாகி உள்ளன.

17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று 3வது கட்ட தேர்தல் நடைபெற்றது.

கேரளா உள்பட , குஜராத், கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடெபற்றது. தேர்தலில் 1640 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

சராசரியாக 65.61 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 63.67 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், அங்கு 13.61 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளன.

கேரளாவில் 71.67 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்தாகவும், குறிப்பாக ராகுல், சசிதரூர் போட்டியிடும் தொகுதிகளில் அதிக அளவிலான வாக்குகள் பதிவானதாகவும் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 67.56 சதவிகிதமும், உ.பி.யில் 61.35 சதவிகிதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.98 சதவிகிதமும், கோவாவில் 73.23 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மேலும், சத்திஷ்கர் மாநிலத்தில் 64.68 சதவிகிதமும், ஒடிசாவில் 60.44 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 79.67 சதவிகிதமும், அசாமில், 80.73 சதவிகித வாக்குகளும், பீகாரில் 59.97 சதவிகித மும், திரிபுராவில் 79.57 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதே நேரத்தில் மேற்கு வங்க மாநிலம்,  டோம்கால்(DomKal) என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி யில், அடையாளம் தெரியாத சிலர், பெட்ரோல் குண்டுகளை வீசியதில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மூன்று பேர் காயமடைந்ததாகவும்,   முர்சிதாபாத்தில், (Murshidabad) வாக்குப்பதிவு மையம் ஒன்றில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மூண்ட மோதலில், வாக்களிப்பதற்காக நின்றிருந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.