சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், மொத்தம் 6,36,12,950 (ஆறு கோடியே, 36லட்சத்து, 12ஆயிரத்து 950 பேர்) வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும், 40,15,878 (40லட்சத்துக்கு 15ஆயிரத்து 878 பேர்) உள்ளனர்.
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டிய பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை சென்னை மாநகர ஆணையர் வெளியிட்டார். அதுபோல மாவட்டங்களில் அம்மாவட்ட ஆட்சியர்கள் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
இந்திய தேர்தல் ஆணையம், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கடந்த 2024ல் அறிவித்தது. அதன்படி , கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி முதல் அக்டோபர் 18-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
பின்னர், அக்டோபர் 29-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28-ந்தேதி வரை பெறப்பட்டது. இந்த காலகட்டத்தில் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த 4 நாட்கள் முகாமிலும், பெயர் சேர்க்க 8,38,016 விண்ணப்பங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4 விண்ணப்பங்கள், ஆதார் இணைப்புக்கு 783 விண்ணப்பங்கள், பெயர் நீக்கம் செய்ய 1,19,701 விண்ணப்பங்கள், திருத்தம் மேற்கொள்ள 4,42,111 விண்ணப்பங்கள் என மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுதவிர, தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகளிடம் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று (2025, ஜனவரி 6ந்தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 6.36 கோடி (6,36,12,950) வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இவர்களில் 3 கோடியே 11 லட்சம் ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 24 லட்சம் பெண் வாக்காளர்களும், 9,120 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இருக்கின்றனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் 1.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 இறுதி வாக்காளர் பட்டியலினை ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ம.பிரதிவிராஜ், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) பி.சுரேஷ் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதன்படி சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. * இதையடுத்து புதிய வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 3,16,642 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம் தொகுதியில் 1,78,980 மிக குறைவான வாக்காளர்கள் உள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 2,50,930வாக்காளர்கள், பெரம்பூர் 2,95,860 வாக்காளர்கள்; கொளத்தூர். வில்லிவாக்கம் 2,44,528 வாக்காளர்கள், திரு.வி.க.நகர் 2,22,727 வாக்காளர்கள், எழும்பூர் 1,95, 151 வாக்காளர்கள், ராயபுரம் 1,97,035 வாக்காளர்கள். சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி 2,39,840 வாக்காளர்கள், ஆயிரம் விளக்கு 2,38,475 வாக்காளர்கள், அண்ணா நகர் 2,80,490 வாக்காளர்கள், விருகம்பாக்கம் 2,87,417 வாக்காளர்கள், சைதாப்பேட்டை 2,73,623 வாக்காளர்கள், தியாகராயர் நகர் 2,35,616 வாக்காளர்கள்,மயிலாப்பூர் 2,69,627 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக வாக்காளர்கள் விவரம்: