சென்னை:
மிழகத்தில், 61,000 கொரோனா நோயாளிகள் சித்தா, யோகா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு  பயன் அடைந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த, அலோபதி சிகிச்சை மட்டுமின்றி, சித்தா, ஓமியோ பதி, ஆயுர்வேதா, யோகா உள்பட  பல்வேறு நடவடிக்கை மூலம்  எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் வகையில், கபசுர குடிநீர், ஆர்சாரிக் ஆல்பம் உள்பட பல மருத்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் கொரோனா நோய் தொற்று உறுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்சினையில் இருந்து விட, யோகா பயிற்சி உள்பட சித்தா மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டால் சுவாசப் பாதைகள் சீராகும். இதனைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில்  86 இடங்களில் யோகா மற்றும் இயறக்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.  இதன்மூலம் 61,000-திற்கும் மேற்பட்டோர் இதுவரை  பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.