இந்தியாவில் ரூ.100கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் 61 பேர்: பாராளுமன்றத்தில் பொன்னார் தகவல்

Must read

 

டில்லி:

ந்தியாவில் ரூ.100கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள்  வெறும் 61 பேர் மட்டும்தான் என்று பாராளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிதித்துறை விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சரான பொன்னார், கடந்த, 2014 — 15 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரில், 24 பேர் தான், தங்களிடம், 100 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.

இது, 2015 -16ல், 38 ஆகவும், 2017 -18ல், 61 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒருவர், கோடீஸ்வரர் என்பதற்கான ஒரே சீரான அளவுகோல் எதுவும், அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றவர், நாட்டில் உள்ள, 130 கோடி பேரில், 61 பேர் தான், தங்களிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக, வருமான வரி துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்து பேசிய நிதித் துறை இணையமைச்சர், ஷிவ் பிரதாப் சுக்லா  பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், 6,900 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்க ளை முடக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், .கடந்த, 2018, டிசம்பர் நிலவரப்படி, வருமான வரி அதிகாரிகள், 2,000 பினாமி பரிவர்த்தனைகளை கண்டுபிடித்து இருப்பதாகவும் கூறினார்.

1,800க்கும் அதிகமான வழக்குகளில், வங்கி டெபாசிட், ரியல் எஸ்டேட், நிலம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்பட்ட சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article