டெல்லி

ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6000 ஐ தாண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. பிறகு ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில்  சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதையொட்டி கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று (ஜுன் 8) தெரிவித்தது. அதாவது இந்தியாவில் 6,133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளாவும் அதைத் தொடர்ந்து குஜராத், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளன. ஜனவரி முதல் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்ச இறப்புகள் (18) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கேரளா (15) மற்றும் டெல்லி (7) உள்ளன.

Corona, India, Exceeds 6000. கொரோனா பாதிப்பு,