சென்னை: கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விடுமுறைகளையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, அரையாண்டு பள்ளி விடுமுறையும் வருவதால், நகர்ப்புறங்களில் உள்ள ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயங்கி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. மேலும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) 300 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வர போதுமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது…