அமேசான்:
பிரேசில் சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும் கும்பலை அடைத்து வைக்கும் பிரத்யேக சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் இன்று திடீரென கலவரம் ஏற்பட்டது.
கைதிகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் கைதிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்துக்கொண்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
எனினும் 60 கைதிகள் வரை பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் என அஞ்சப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel