புதுடெல்லி:
இந்தியாவில் நிலத்தடி நீருடன் 60 சதவிகிதம் நச்சு பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளது.
கங்கை நதிப்படுகையின் நிலத்தடி நீரில் உப்பும், ஆர்சனிக் என்ற நச்சுபொருளும் கலந்துவிட்டதால் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் மற்றுறும் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வாழும் கிட்டத்தட்ட 75 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இத்தகவலை வெளியிட்டிருப்பது நேச்சர் ஜியோசயன்ஸ் என்ற ஆய்வு இதழாகும். கங்கைப் படுகையில் கிட்டத்தட்ட 650 அடி ஆழம்வரை உள்ள தண்ணீர் 23% முழுக்க உப்புநீராக மாறிவிட்டதாகவும் அதில் 37% ஆர்சனிக் நச்சு கலந்துவிட்டதாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீரானது (வடக்கு மற்றும் வடகிழக்கு)இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளின் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இனி இத்தண்ணீரை குடிநீராகவோ, விவசாயத்துக்கோ பயன்படுத்த முடியாது.
மேலும் இப்பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு கோடி கிணறுகளிலிருந்து தினமும் தண்ணீர் இறைக்கப்படுவதால் தண்ணீர் பற்றாக்குறையும் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நேச்சர் ஜியோசயன்ஸ் கவலை தெரிவித்திருகிறது.
Patrikai.com official YouTube Channel