சூடான்:
சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே இரண்டு மாதங்களாக சண்டை நீடித்துவரும் நிலையில், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் கார்டூமில் உள்ள அனாதை இல்லத்தில் ஆறு வாரங்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடந்த வார இறுதியில் மட்டும் 26 குழந்தைகள் இரண்டு நாட்களில் இறந்ததாக கூறப்படுகிறது.