டில்லி:
நாடு முழுவதும் 5 மாநிலங்கள் உள்பட ஒரு யூனியன் பிரதேச கவர்னரையும் ஜனாதிபதி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசுத்தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்
பீகார் மாநில கவர்னராக சத்ய படேல் நியமனம்
அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக பி.டி.மிஸ்ரா நியமனம்
அசாம் மாநில கவர்னராக ஜக்தீஸ் முஹி நியமனம்
மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் நியமனம்
யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel