சென்னை:

மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த கூடுதல் நீதிபதிகள் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த  திருமதி ராமதிலகம், திருமதி தரணி, திரு.ராஜமாணிக்கம், திருமதி கிருஷ்ணவல்லி, திரு.பொங்கியப்பன் மறறும் திருமதி ஹேமலதா ஆகியோர்  சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டு உள்ளது.