டில்லி:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.  2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்த கூடுதல் நாள் ஆகும் எனவும் கூறியுள்ளது.

இதையடுத்து, தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஆளும் கட்சியின் எந்தப் பிரிவை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்?  அதை பிரதிநிதிப்படுத்த நீங்கள் யார் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் தமிழக ஆட்சியில் உள்ள குழப்பமே உள்ளாட்சி தேர்தல் தாமதத்திற்கு காரணமா என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தல் குறித்த விசாரணையின்போது பல்வேறு காரணங்களை கூறி, அவகாசம் தேவை உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் தாமதப்படுத்தி வந்தன.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும் என தெரிவித்தார்.

2001ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்த கூடுதல் நாள் ஆகும் எனவும்  தொகுதி வரையறை செய்ய வேண்டியதிருப்பதால் கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறினார்.

அதையடுத்து தேர்தல் ஆணையத்துக்கு  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆளும் கட்சியின் எந்தப் பிரிவை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்? என்று வினவினர். அதை பிரதிநிதிப்படுத்த நீங்கள் யார் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆகும் தாமதமே தமிழக ஆட்சியில் குழப்பங்கள் இருப்பதை காட்டு கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.