ஜம்மு:
ஜம்முவில் 6 மணி நேரம் மின்வெட்டு அறிவிப்பு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஜம்மு நகர்ப்புற பகுதிகளில் மின்வெட்டுக்கான அட்டவணையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (JPDCL) தினசரி ஆறு மணி நேர மின்வெட்டை அறிவித்தது. இந்த மின்வெட்டு காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மின்சார விநியோகத்தில் வெட்டுக்களுக்கான வெவ்வேறு அட்டவணைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஜம்முவில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். குறிப்பாக ஜம்மு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடிகள் குறித்து கவலை தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உறுப்பினருமான பிரணவ் ஷகோத்ரா, பாஜக கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகம், அப்பகுதியை முழுமையான மின்வெட்டுக்கு ஆளாகியுள்ளது. என்றார்.
கண்காட்சி மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஜம்முவின் பழைய நகர பகுதிகளை நோக்கி சென்றது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிக்காக பள்ளி கிராமத்தில் சமீபத்தில் நடந்த பேரணியை சுட்டிக்காட்டிய ஷகோத்ரா, அரசியல் நிகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட அரசாங்க நிதி, ஜம்மு மக்களுக்கு நிவாரணம் வழங்க மூன்று மாத மின்சாரம் வாங்க போதுமானது என்றார்.
“தோராயமான மதிப்பீட்டின்படி, அந்த அரசியல் நிகழ்வுக்கு குறைந்தபட்சம் ரூ. 100 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.