புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் கலஹந்தியில் அமைந்துள்ளது கார்ல்பட் வனவிலங்கு சரணாலயம். 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் யானை, சிறுத்தை, மான், ஓநாய், காட்டு நாய், மலபார் அணில் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன.
இந் நிலையில் இந்த சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியாகி உள்ளது. யானைகளின் தொடர் மரணம், வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் நவீன் பட்நாயக், யானைகள் இறப்பிற்கு கவலை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறி உள்ளார்.