திண்டுக்கல்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிட்டி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ளது. இது தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை கொண்டதகும்  இங்கு தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உள்நோயாளிகள் வார்டு, 3-வது தளத்தில் நோயாளிகள் வார்டு, 4-வது தளத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கும் அறை உள்ளது.

நேற்று இங்கு 45 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு 9 மணி அளவில் ஆஸ்பத்திரி வரவேற்பு அறையில் திடீரென ‘டமார்’ என்ற சத்தம் கேட்டதையடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ சிறிதுநேரத்தில் தரைதளம் முழுவதும் பரவியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றும் தீ கட்டுப்படாமல் மேல் தளங்களுக்கு பரவியது.

அனைத்து தளங்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மருத்துவமனை முழுவதும் புகைமூட்டம் பரவிஇதனால் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பதறி துடித்து அங்கும் இங்கும் ஓடினர்.  தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மேலும் 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சு வாகனங்கள் அங்கு விரைந்தன.  விபத்தில் தப்பிக்க நோயாளிகள் மற்றும் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் லிப்ட் வழியாக கீழே இறங்க முயன்றபோது அவர்கள் லிட்டுக்குள் சிக்கி கொண்டனர். எனவே லிப்டை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் அவர்களை மீட்டனர்.

தீ விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் மருத்துவ கல்லூரிஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது இது குறித்து தகவல் அறிந்த ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உள்ளிட்ட உயர் அதிகாாிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.