லக்னோ,

.பி மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பல் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 45 ஆயிரம் செல்போன் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. .இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தீவிரவாத தடுப்புப்படை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சீதாபுர் பகுதியில் தீவிரவாத எதிர்ப்புப் படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது 6 பேர்  கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில்,  அவர்களிடமிருந்து 45 ஆயிரம் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்கள் இந்த சிம்கார்டுகள் மூலம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளதாகவும், இந்த சிம்கார்டுகள் இவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது, இதை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள், பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து  அவர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்த  தீவிரவாத தடுப்பு பிரிவு காவலர்கள்  அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.