புதுடெல்லி: இந்தியாவில் 6.5% அளவிற்கு, கொரோனா தடுப்பு மருந்து வீணாகிறது என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் நடவடிக்கைகளை இன்னும் செம்மைப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வீணாதலுக்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, நகர்ப்புற பகுதிகளில், கொரோனா தடுப்பூசி மையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், பல ஊரகப் பகுதிகளில் அதுதொடர்பான விழிப்புணர்வு, மக்களிடம் போதுமான அளவிற்கு கிடையாது.
இதனால், சப்ளை செய்யப்பட்ட மொத்த டோஸ்களில் 6.5% அளவிற்கு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தால், மொத்தம் 75.4 மில்லியன் அளவுள்ள தடுப்பு மருந்து, மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும், அதில் இதுவரை 36 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில், ஆஸ்ட்ராஸெனகா தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. எவ்வளவு டோஸ்கள் வீணானது என்று அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றாலும், அதன் அளவு 2 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.