இந்தோனேசியா:
ந்தோனேசியா தீவுக் கூட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி. சுலாவெசி தீவின் கொடாமோபகு என்ற இடத்தில் இருந்து கிழக்கே 224 கி.மீ. தூரத்தில், இந்தோனேசிய நேரப்படி 15.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.