உங்களது கர்நாடகா இசை சிடி மற்றும் பணிமனையை மேற்கத்திய நாட்டினர் எப்படி உணர்கிறார்கள்?
இசை சிடியில் கேட்ட சிலரிடம் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் அவர்கள் இசையை எப்படி ரசி க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அவர்கள் எப்படி இசையோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிற £ர்கள் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. பலர் கர்நாடகா இசை குறித்து ஆராய்ச்சி செய்து கெ £ண்டிருக்கிறார்கள். இதுபோன்ற இசையை நான் கேட்டதே கிடையாது என பலரும் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள். மேற்கத்திய நாடுகளில் உள்ள குறுகிய நபர்கள் தான் கர்நாடகா இசை குறித்து அறிந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிய £ளர்கள், மாணவர்கள், இசையமைப்பாளர்கள் தான் கர்நாடகா இசை குறித்து அறிந்துள்ளனர். பொது மக்கள் மத்தியில் அவ்வளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை. பணிமனைகளில் அடிப்படை தகவல்களை தான் அளிக்க முடியும்.
அவரவர் நாட்டிற்கு என்று தனித்தனி இசை இருக்கிறது. அப்புறம் ஏன் கர்நாடக இசை கற்றுக் கொள்ள அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், உண்மையிலேயே அந்த கற்றுக் கொண்டு, கேட்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. இந்த இசை குறித்து அடிப்படை தெரிந்திருந்தால் தான் இதை பாராட்டக் கூட முடியும். அதை படித்து, அதை கேட்டு, அதை விரும்பினால் தான் கர்நாடக இசையுடன் தொடர்ந்து பயணிக்க முடியும்.
கர்நாடகா இசையை அவசர அவசரமாக கற்றுக் கொள்ள முடியாது. படிப்படியாக தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். நான் கற்க வந்தபோது முதல் நாளில் செய்வதறியாது தவித்தேன். ஆனால் எனது ஆசிரியர் தான் எதை படிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறி என்னை பக்குவப்படுத்தினார்.