டில்லி:
5வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பகல் 1 மணி அளவில் 4056 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பகல் 1மணி நிலவரப்படி வாக்குகள் பதிவானது சதவிகிதம் என்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சராசரியாக 40.56 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு விவரம்…
பீகார் – 32.27 சதவிகிதம்
ஜம்மு காஷ்மீர் – 11.35 சதவிகிதம்
ஜார்கண்ட் – 45.98 சதவிகிதம்
மத்திய பிரதேசம் – 42.77 சதவிகிதம்
ராஜஸ்தான் – 42.61 சதவிகிதம்
உத்தரபிரதேசம் – 35.15 சதவிகிதம்
மேற்கு வங்காளம் – 50.78 சதவிகிதம்