சென்னை: சென்னையில் நாளை 1600 தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை முழுமையாக விரட்யடிக்கும் வகையில், திமுக அரசு தடுப்பூசி முகாம்கள் அமைத்து, பொது மக்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி வருகிறது. மேலும் சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 5 கோடி பேருக்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாக அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாளை 5வது கட்ட தடுப்பூசி மெகா முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன்படி தலைநகர் சென்னையில் மட்டும், 1600 தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக ககன்தீப் சிங் பேட்டி தெரிவித்து உள்ளார்.
ஒரு வார்டில் 8 முகாம் என்ற அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 83 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள். மீதமுள்ள மக்களும் விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
தடுப்பூசி முகாம் குறித்து கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்த போது தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது. எனவே தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கப்படும் நோய் பாதிப்பு குறையும். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.
தமிழகத்தில் நாளை 5வது முறையாக 30ஆயிரம் தடுப்பூசி மெகா முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்