சென்னை,
வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
பருவமழை பொய்த்துபோனதால் தமிழகம் முழுவதும் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகி வருகின்றன. இதை காணும் விவசாயிகள் அதிர்ச்சியில் மரணமடைந்து வருகின்றனர்.
விவசாயிகள் மரணத்தை கண்டுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து சந்தித்து பேசினார்.
சந்திப்பு முடிந்து வெளியேவந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 5-ந்தேதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம்.
இப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியபோது எங்கள் கோரிக்கை பரிசிலிப்ப தாக உறுதி கூறி உள்ளார்.
மேலும் விவசாயிகள் பிரச்சனை குறித்து 5-ந்தேதி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து 5-ந்தேதி நடைபெற இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.