சென்னை:

மிழகத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதற்க மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்றைய தமிழக அமைச்சரவை கூட்டத்தில், இது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு  அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி களில்,  இந்த கல்வியாண்டு முதல், 5ம்வகுப்பு மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்த நிலையில் 5வது மற்றும் 8வது வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கமளித்து உள்ளது.

இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.