டில்லி :
மானிய உர விற்பனையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு 59% விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மானிய உர விற்பனையுடன் ஆதார் இணைக்கும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக மைக்ரோசேவ் என்ற சர்வதேச நிதி ஆலோசனை நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. மகாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 14 மாவட்டங்களில் இந்த கருத்து கணிப்பு நடந்தது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்டது.
இதில் மத்திய அரசின் மானிய உர விற்பனையை ஆதாருடன் இணைக்க 59% விவசாயிகள் ஆதரவாக வாக்களித்தனர். பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கைரேகை ஒத்துபோகாத பிர ச்னையால் ஆதார் இணைப்பை 79% விவசாயிகள் எதிர்த்துள்ளனர். இதற்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மைக்ரோ சேவ் நிறுவனத்தின் டிஜிட்டல் நிதி சேவை பிரிவு தலைவர் மிடுல் தப்லியா கூறுகையில், ‘‘பணமதிப்பிழப்பால் விவசாயிகளும் அதிகளவில் பாதித்திருப்பது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. எனினும், பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் இணைப்பை பெரும்பாலானவர்கள் ஆதரி க்கின்றனர்.
ஆதார் இணைப்பால் தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் யூரியா விற்பனை, அண்டை நாடுகளுக்கு மலிவு விலை உரம் கடத்தல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரம் தாராளமாக கிடைக்கிறது. இதனால் தான் ஆதார் இணைப்புக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்’’ என்றார்.