சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னையில் இருந்து நாளை முதல் 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை வார இறுதி நாட்களை முன்னிட்டு 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 586 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விரைவு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 586 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனப்டி, வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் டிச.27, 28 தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு 485 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.