அமெரிக்காவில் நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை 6.6 கோடி பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் முழுவதுமாக போடப்பட்டு விட்டது.
தடுப்பூசி போட்டும் ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய்யம் (சி.டி.சி.) விளக்கமளித்துள்ளது.
இதுவரை 5,800 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் இது மொத்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் 0.008 சதவீதம் தான் என்றும்.
பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அறுவது வயதை கடந்தவர்கள் என்றும், 29 சதவீதத்தினருக்கு நோய் அறிகுறியே இல்லாமல் இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 396 பேருக்கு மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிப்புக்கு உள்ளான 5800 பேரில் 65 சதவீதம் பெண்கள் என்றும், இதில் 74 பேர் (1 சதவீதம்) மரணமடைந்துள்ளதாவும் கூறிய சி.டி.சி. இது சுகாதார அதிகாரிகள் அச்சுறுத்திய அளவைவிட குறைந்த அளவிலான பாதிப்பு தான் என்று கூறியுள்ளது.
இரண்டாவது இறுதி கட்ட டோஸ் போட்டுக்கொண்டு ஒருவாரம் முதல் 6 மாதம் வரை ஆனவர்களின் தரவுகளை ஆய்வு செய்தபோது, பைசர்-பயோஎன்டெக் தயாரித்துள்ள தடுப்பூசி 91.3 சதவீத ஆற்றல் திறன் கொண்டதாக உள்ளது என்று பைசர் தெரிவித்துள்ளது.
மற்றொரு தடுப்பூசி நிறுவனமான மோடெர்னா இறுதி டோஸ் தடுப்பூசி போட்டுகொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களின் தரவுகள் படி, 90 சதவீத செயல் திறனுடனும், மிகவும் தீவிர நோயாளிகளுக்கு 95 சத செயல்திறனுடன் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.