டெல்லி: மத்தியஅரசு மாநிலங்களுக்கான ரூ.1.42 லட்சம் கோடி நிதியை விடுவித்தது உள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதி கிடைத்துள்ளது.

மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3வது தவணை நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரிப்பகிர்வு நிதியாக ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு விவரம்:

உத்தரபிரதேசத்துக்கு ரூ.25,495 கோடி, பீகாருக்கு 14,295 கோடியும், மத்திய பிரதேசக்கு ரூ.11,157 கோடியும், மேற்குவங்கத்திற்கு ரூ.10,692 கோடியும், மகாராஷ்டிரா ரூ. 8,978 கோடியும், ராஜஸ்தான் ரூ.8,564 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.6,435 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,752 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ 5,183 கோடியும், குஜராத்துக்கு ரூ.4,943 கோடியும், சட்டீஸ்கருக்கு ரூ.4,842 கோடியும், ஜார்கண்ட் மாநிலத்திற்கு ரூ.4,700 கோடியும், அசாமிற்கு ரூ.4,446 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.2,987 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு ரூ.2,736 கோடியும், பஞ்சாப் ரூ.2,568 கோடியும், அருணாசல பிரதேசத்திற்கு ரூ.2,497 கோடியும், உத்தர்கண்ட் மாநிலத்திற்கு ரூ.1,589 கோடியும், அரியானாவுக்கு ரூ. 1,553 கோடியும், இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.1,180 கோடியும், மேகாலயாவுக்கு ரூ.1,090 கோடியும், மணிப்பூருக்கு ரூ.1018 கோடியும், திரிபுராவுக்கு ரூ.1,006 கோடியும், நாகலாந்துக்க ரூ.809 கோடியும், மிசோரமுக்கு ரூ.711 கோடியும், சிக்கிமிற்கு ரூ.551 கோடியும், கோவாவுக்கு ரூ.549 கோடி என மொத்தம் ரூ.1,42,122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி மாதம்  12ம் தேதி மாநிலங்களுக்கு ரூ.72,961 கோடி வரிப்பகிர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி 29ந்தேதி அன்று 3வது தவணை யாக கூடுதலாக ரூ.1,42,122 கோடி வழங்கப்பட்டுள்ளது.