சென்னை: தமிழ்நாட்டில் 57 லட்சம் பேர் இன்னுமி 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை. இது கவலையளிக்கிறது என  அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் பாரதி நகர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை  திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் சுமார்  68% பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸ் 25% பேர் செலுத்தியுள்ளனர். முதல் டோஸ்க்கும் இரண்டாவது டோஸ்க்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. 57 லட்சம் பேர் உரிய நேரத்தில் இன்னுஅம இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை. இது கவலையளிக்கிறது.

வரும் சனிக்கிழ்மை ஆறாவது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமை பயன்படுத்தி மக்கள் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த  மெகா தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது  பண்டிகை காலம் என்பதில் மக்கள் கூட்டத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும்,  கூட்டத்தில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும், தமிழ்நாட்டில், டெங்கு கட்டுக்குள் உள்ளது. 340 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.