பீகார் வந்த 560 தொழிலாளர்களுக்கு கொரோனா: மற்றவர்களின் முடிவுகளுக்காக காத்திருக்கும் சுகாதாரத்துறை

Must read

பாட்னா:டெல்லியில் இருந்து பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து பீகார் திரும்பிய 560 பேருக்கும் கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. மாநில சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்ட தரவுகளின் படி அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் இருந்து திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து 10,300 க்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில், 2,700 க்கும் மேற்பட்ட மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
எஞ்சிய 7,600 மாதிரிகளின் முடிவுகளிலிருந்து, 560 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 560 பேரில் டெல்லியில் இருந்து வந்தவர்கள் 172 பேர். குஜராத்தில் இருந்து 128 பேரும், மகாராஷ்டிராவில் இருந்து 123 பேரும் ஊர் திரும்பி இருக்கின்றனர்.
மாநிலத்தில் இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கை 7,40, 819 ஆகும். இவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 566 சிறப்பு ரயில்கள் திரும்பி இருக்கின்றனர்.
டெல்லியில் இருந்து பீகார் திரும்பிக்கொண்டிருந்த 1070 புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து சுகாதாரத் துறை தோராயமாக மாதிரிகளை சேகரித்தது. அதில் 172 மாதிரிகள் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தி இருக்கின்றன. சேகரிக்கப்பட்ட 548 மாதிரிகளில் நெகட்டிவ் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
 

More articles

Latest article