சென்னை

மிழகத்தில் 56 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ளா ஐ பி எஸ் அதிகாரிகளில் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தள்ளது. அவர்களில் 3 ஏடிஜிபிக்களுக்கு, டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தலைமையிட ஏடிஜிபி வினித் தேவ் வான்கடேவுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி கல்பனா நாயக், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா புதுக்கோட்டை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் அரியலூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை எஸ்.பி, வந்திதா பாண்டேவுக்கு திண்டுக்கல் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கிழக்கு இணை ஆணையர் சரோஜ் குமார் தலைமை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.