மேசான் மேகக் கணினி சேவைகளில்  பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள்  அனைவரும் பார்க்கும் வகையில் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சமீப காலமாப பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இது போன்ற புகாரைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும், பயனர்களின் தகவல்கள் திருடு போவது தொடர்ந்து வருகிறது.

UpGuard Cyber Risk குழுவின் சமீபத்திய அறிக்கையின் படி பேஸ்புக் நிரல்களின் பகுதியில் உள்ள இரண்டு பேஸ்புக் செயலிகளின் வழியே 54 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் பொதுமக்கள் வெகு எளிதாக காணும்படி இருந்திருக்கிறது. பல்வேறு கட்ட மடல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்ததிற்கு அனுப்பியபின்னரே அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

மெக்சிகோ நா்டில் உள்ள  Cultura Colectiva பத்திரிக்கையின் சார்பில் உள்ள பேஸ்புக் செயலியில் அந்த செயலியை பயன்படுத்தும் பேஸ்புக் பயனாளர்களின்  அடிப்பட விபரங்களான  fk_user_id- பயானளர் எண், fb_user- பேஸ் புக் பயானளர் பெயர், fb_friends-பேஸ்புக் நண்பர்கள், fb_likes-பேஸ்புக் லைக்குகள்,  fb_music-பேஸ்புக் இசை, fb_movies-பேஸ்புக் படங்கள், fb_books-புத்தகங்கள், fb_photos-பேஸ்புக் படங்கள், fb_events- பேஸ்புக் நிகழ்ச்சிகள், fb_groups-பேஸ்புக் குழு, fb+checkins- பேஸ்புக் பயனாளர் சென்ற இடங்கள், fb_interests- பயனாளரில் விருப்பம் என எல்லா பயனாளர்களில் அடிப்படை தகவல்களை அதிலிருந்து எடுத்துள்ளனர்.

ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா பிரச்னை உங்களுக்கு நியாபகம் வந்திருக்கலாம். ஏறக்குறைய அதே போல் பிரச்னைதான் இப்போதும் நடைபெற்றுள்ளது.

இதன் வழியே நாம் ஒவ்வொருவரின் விருப்பங்களையும், மொத்தமாக யார் யாருக்கு என்னென்ன புத்தகங்கள் பிடித்திருக்கிறது, என்னென்ன படங்கள் பிடித்திருக்கிறது என எல்லா விபரங்களையும் எடுக்க முடியும். ஆனால் இப்படி அதிமுக்கியமான தகவல்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிறுவனம் இணையத்தில் பாதுகாப்பாக வைக்காமல் பொதுவாக வைத்து இருக்கின்றனர் என்பது கவலைக்குரிய விசயம்

146 ஜிபி கொள்ளளவு கொண்ட இந்த தரவுவிபரங்களை மொத்தமாக ஒரு பைலில் வைத்துள்ளனர்.

Cultura Colectiva நிறுவனத்திற்கு ஜனவரி 10ம்  2019, தேதியன்றும், ஜனவரி 14ம் தேதியன்றும் மின்னஞ்சல் வழியே அவர்களின் தகவல்கள் திறந்த நிலையில் உள்ளது பாதுகாப்பாக வையுங்கள் என்றும் மடல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஏப்ரல் 3ம் தேதிதான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

At the Pool என்ற இன்னொரு பேஸ்புக் செயலியும் ஏறக்குறைய அதேபோல் தங்கள் ஆவணங்களை எல்லா மக்களும் பொதுவாக இணையத்தில் பார்க்கும்படி பொது அனுமதியை வழங்கி வைத்தி ருக்கிறது

அமேசான் மேகக்கணிமை நிறுவனத்தின் எஸ்3 எனும் சேமிப்பகத்தில் பாதுகாப்பாக வழங்க வேண்டிய அனுமதியை பொது என்ற அனுமதி கொடுத்திருப்பதால் இந்த தரவுகளை யார் வேண்டு மானாலும் பார்க்கலாம்

பேஸ்புக் நிறுவனமும் என்னதான் பாதுகாப்பாக வழங்க முடிவு செய்தாலும் பேஸ்புக் செயலி களில் செயல்படும் செயலிகள் தனியாகத்தான் தங்கள் வழங்கிகளில் இருந்து செயல்படுகின்றன. சொந்த வழங்கிகளில் இருக்கும்படி வைத்திருக்கின்றனர்.

நம் இந்தியாவிலும் இதுபோன்ற பல செயலிகள் நமக்குத்தெரியாமல் நம் தரவுகளை எடுத்துக்கொண்டுதான் உள்ளன. உதாரணத்திற்கு நான் யார், போனபிறவியல் நீங்கள் யார், பாகுபலி படத்தில் உங்களக்குபொருத்தமான கதாப்பாத்திரம் போன்ற எல்லா செயலிகளும் உங்களிடம் இருந்து தகவல்களை எடுக்கவாய்ப்புண்டு.
எனவே உங்களுக்கு விருப்பமான செயலிகளில் மட்டுமே தேவையாக இருந்தால் மட்டுமே அந்த செயலியை பயன்படுத்துங்கள்

ஆனால் இங்கே இன்னமும் கவனமாக இருக்கவேண்டியது பேஸ்புக் நிறுவனம் தான், ஏனெனில் அவர்களிடம் நுறுகோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களும், 90 லட்சம் செயலிகளும் பேஸ்புக் பயன்பாட்டில் தொடர்பில் உள்ளது கவனத்தில் கொள்ளவேண்டும்

-செல்வமுரளி