லியோங்க் லின்சி என்ற பிரமிளா தாஸ்
லியோங்க் லின்சி என்ற பிரமிளா தாஸ்

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்ட்த்தைச் சேர்ந்த லியோங்க் லின்சி என்ற பிரமிளா தாஸ் 53 ஆண்டுகளுக்குப் பிறகு தனது  பெற்றோரை  சீனாவில் சந்திக்க இருக்கிறார். இந்த உருக்கமான சம்பவம் வருமாறு:-

 1962 இல் இந்திய – சீன எல்லைப் போர் தீவிரமாக நடைபெற்றது. அப்போது லியோங்க் லின்சி என்ற பிரமிளாவுக்கு 6 வயது. கடுமையான போர்ச்சூழலில் இந்தியாவில் வசித்து வந்த சீன வம்சாவளியினர் ரயிலில் ஏற்றி நாடு கடத்தப்பட்டனர். அப்படி அனுப்பப்பட்ட 100க்கும் அதிகமான  குடும்பங்களில் பிரமிளாவின் பெற்றோரும் அடக்கம். இதில் வேடிக்கை என்னவெனில் பிரமிளாவின் பெற்றோர் மிஸோராம் மாநிலத்தை பூர்வீகமாய்க் கொண்டவர்கள். அவர்களின் முகத்தோற்றம் சீனர்களைப் போல் இருந்ததால் அவர்களையும் சேர்த்து இந்திய காவல்துறை நாடு கடத்தியது. இந்த நாடு கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது பிரமிளா தன்னுடைய தாத்தா-பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்த தகவல் அறிந்து பிரமிளாவின் தாத்தா- பாட்டி ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் அவர்கள் ரயிலில்சீனாவை நோக்கி புறப்பட்டு விட்டது. இதனால் அவர்களால் இந்தியா திரும்பமுடியவில்லை. எனினும் தன் மகளுடன் கடிதம் மற்றும் தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்துள்ளனர்.

இச்சூழலில் அசாமிய மொழி இலக்கியத்துக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற ரிட்டா சௌத்ரியை பிரமிளா கவுகாத்தியில் சந்தித்துள்ளார். இவர் எழுதி சாகித்ய அகாதமி பெற்ற நாவல், அசாமிலிருந்து சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களின் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த நாவலில் அசாமிலிருந்து சீனாவுக்கு திருப்பி அனுப்பட்டவர்களின் துயரம். அவர்களின் வேர்கள் பற்றி விவரிக்கிறது. எனவே இந்த நிலவரம் பற்றி ரிட்டா சௌத்ரி தெளிவாக அறிந்து வைத்திருப்பவர்.
சீனாவில் 4 தலைமுறை வேர்களைக் கொண்ட  அவர்கள், அங்கிருந்து அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளாக ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டு, இந்தியா- சீனா போர்க் காலத்தில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
53 ஆண்டுகளாய் பெற்றோரை பிரிந்து வாழும் பிரமிளா இதுபற்றி ரிட்டா சௌத்ரியிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார்.  இதுதொடர்பாக ரிட்டா சௌத்ரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். விரிவான கடிதம் குறித்து ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம் பல கால இடவெளிக்குப்பின் பிரமிளாவின் கோரிக்கைக்கு பதில் கிடைத்திருக்கிறது. பிரமிளா தற்போது அவருடைய கணவர், ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கெஹூங்க் தேயிலை தோட்டத்தில் வசித்து வருகிறார்.
இதனை அடுத்து 53 ஆண்டு கால பிரிவுக்குப்பின்  சீனாவின் குவாங்க் சோஹூ மாகாணத்தில் வசித்து வரும் பெற்றோரை பிரமிளா சந்திக்க இருக்கிறார்.