சென்னை
தமிழகத்தில் 523 கோவிலகளில் சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்குவதற்காக தர சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக கோவில்களில் அன்னதானம் திட்டம் கொண்டு வரப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 13 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 கோவில்களில் ஒரு வேளை அன்னதானமும் நடந்து வருகிறது.
இவ்வாறு கோவில்களில் தயாரித்து வழங்கப்படும் இத்தகைய பிரசாதம், அன்னதானம் தரத்துடன் இருப்பதை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்து, தர சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
ந்தியா முழுவதும் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுவரும் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் தமிழகத்தில் 523 கோவில்களுக்கு தர சான்றிதழ்களை வழங்கியுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக அதிகமான தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீதமுள்ள கோவில்களுக்கும் தர சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
TN, 523 temples, Quality annadhanam, certificate,