சென்னை:

மிழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த சில ஆண்டுகளாக சேர மாணவர்களிடையே ஆர்வம் இல்லாத நிலையில், நடப்பு ஆண்டில் 52 சதவிகித இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்  மொத்தம் 479 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. இதற்கான கவுன்சிலிங் 4 சுற்றுக்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 83,396 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது மொத்தத்தில், 48 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 52 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டும் இதேபோன்று பொறியியல் படிப்பில் 77,450 இடங்களே நிரம்பின. சுமார் ஒரு லட்சம் இடங்களில் யாரும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.