திருவள்ளூர்:
திருவள்ளூர்  மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும்  52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக  உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ்பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில்,  புதிதாக 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  9,459 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில்  சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 167-ஆக உள்ளது.