டெல்லி:
லாக்டவுன் காலத்தில் 41 கோடி வங்கி கணக்குகளில் 52ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்ட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று கூறியவர், இதுவரை  52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது
ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது
6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகம்
லாக்டவுன் காலத்தில் உஜ்வாலா போன்ற பல திட்டங்கள் ஏழைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன
41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன
5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது
71 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.