மதுரா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரவி வரும் மர்ம காயச்சாலால் இதுவரை 51 பேர் உயிர் இழந்துள்ளனர்.
நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் உ பி மாநிலத்தில் மதுரா, பாலியா மற்றும் மொராதாபாத் பகுதிகளில் ஒரு மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இது குறித்து நடந்த சோதனைக்கு எடுக்கப்பட்ட மாதிரிகள் டெங்கு, பூஞ்சை தாக்கு ஆகியவை போல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி மத்திய அரசு ஒரு ஆய்வுக் குழு ஒன்றை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி உள்ளது. அந்தக் குழுவின் ஆய்வறிக்கை அநேகமாக இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை குழந்தைகள் உட்பட 51 பேர் இந்த மர்மக் காய்ச்சலால் உயிர் இழந்துள்ளனர். இது மக்களிடையே கடும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
மாநில அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வீடு வீடாக் சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு மாநில அரசுக்குக் குழுவினர் தகவல் அளித்து வருகின்றனர்.