நெட்டிசன்:
ராகவேந்திர ஆரா (  Raghavendra Aara) அவர்களின் முகநூல் பதிவு:
1
மோடியின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டால் முன்பு தேச துரோகி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
ஏ.டி. எம். வாசல்களில், பெட்ரோல் பங்குகளில்.,… கையில் ஐநூறு ஆயிரத்தை வைத்துக் கொண்டு அடுத்த சில நாட்களை கழிக்க புதிராய் நிற்கிறார்கள். தன் மகள் திருமண மண்டபத்துக்கு பதிவு செய்ய நேற்று காலை சில பத்தாயிரங்களை கடன் வாங்கி வைத்திருக்கும் ஒருவர் இப்போது திணறிக் கொண்டிருக்கிறார். இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் அனைவரையும்… ‘மடியில் கனமுள்ளவர்கள்” என்று முத்திரை குத்தி இழிவு செய்ய நினைப்பது என்ன நியாயம்?
இதோ என்னிடம் நூறு ரூபாய் பெற்று என் நண்பர் இப்போது செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயிலேறப் போய்க் கொண்டிருக்கிறார். எந்த ஒரு ஏ.டி.எம்.மிலும் பணம் இல்லை. மக்களைப் பற்றி சிந்திக்கின்ற அரசாக இருந்தால் அனைத்து வங்கிகளையும் தன் ஏ.டி.எம்.களில் நூறு ரூபாய்களை அதிக அளவிலும் தொடர்ந்தும் நிரப்பி வைத்திருக்க உத்தரவிட வேண்டியதுதானே.
ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசுகளின் தொல்லை தாங்க முடியவில்லை.