மும்பை,
500கிலோ எடையுடன் சிகிச்சைக்காக மும்பை வந்த எகிப்து பெண் இமான் அகமது இன்று மேல் சிகிச்சைக்காக அபுதாபி செல்கிறார்.
உடல் எடைக் குறைப்பு சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எகிப்து பெண் இமான் அகமது, 330 கிலோ எடை குறைந்த நிலையில் இன்று அபுதாபி மருத்துவ மனைக்கு புறப்பட்டு செல்கிறார்.
உலகின் மிகவும் குண்டான பெண்ணாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமது.. இவரது உடல் எடை 500 கிலோவாக இருந்தது.
இவரது எடையை குறைக்க முப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான அதிநவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது எடை தற்போது 170 கிலோவாக குறைந்தது. தற்போது கை, கால்களை ஆட்டி வருகிறார்.
ஆனால், அவரது சகோதரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில் 83 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, மேற்கொண்டு சிகிச்சை பெற அபுதாபியில் உள்ள புர்ஜீல் மருத்துவமனைக்கு செல்கிறார்.. அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.